உடன்குடி பெருமாள்புரம் கிங்மேக்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டியில் கொட்டங்காடு அணி சிறப்பிடம் பெற்றது.
வட்டார அளவில் 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் உடன்குடி பெருமாள்புரம் திருவள்ளுவர் மன்ற மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கொட்டங்காடு அணிக்கு வெற்றிக்கோப்பையை ஜெயசீலன் வழங்கினார்.
இரண்டாமிடம் பெற்ற பெருமாள்புரம் அணிக்கு கோப்பையை வெங்கடேஷூம், மூன்றாமிடம் பெற்ற உதிரமாடன்குடியிருப்பு அணிக்கு அய்யாத்துரையும், நான்காமிடம் பெற்ற ஊதிரமாடன்குடியிருப்பு அணிக்கு பார்வதி முத்துவும் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிஏற்பாடுகளை பெருமாள்புரம் கிங்மேக்கர் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.