1 வயது சிறுவனுக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால் – டெல்லி

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்ததால் ஆம் அத்மி தொண்டர்கள் டெல்லி முழுவதும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்களுடன் ஒரு வயது சிறுவன் மாஃப்ளர், அரவிந்த் கெஜ்ரிவால் போன்று வேடமணிந்து தொப்பி, கண்ணாடி அணிந்து தொண்டர்களுடன் இணைந்து வெற்றியை கொண்டாடிய அந்த சிறுவனின் செயல் ஊடகங்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பிப்.16 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவிற்கு மாஃபளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *