எஸ்.எஸ் தெரு சிறுதொழில் வியாபாரிகள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு த.வெள்ளையன் அவர்களின் வேண்டுகோளின் படி இன்று (27.07.2020) காலை 10 மணி அளவில் எஸ்.எஸ் பிள்ளை தெரு, சிறுதொழில் வியாபாரிகள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் திரு. பழரசம் P. விநாயகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். பார்கவுன்சில் மெம்பர் வழக்கறிஞர் திரு. T.M பிரபு அவர்கள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய ஆய்வாளர் திருமிகு. S. அருள் அவர்கள் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமிகு. J. ரவிக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்கள்.

துத்துக்குடி எஸ்.எஸ் தெரு சிறுதொழில் வியாபாரிகள் நல முன்னேற்ற சங்கம் தலைவர் T. பாஸ்கர், செயலாளர் R. வேல்ச்சாமி, பொருளாளர் C. குருசாமி, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *