மக்களின் நலன் காக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பரமன்குறிச்சி திமுக சார்பில் குதிரைமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மானாடு பகுதிகளில் மக்களின் நலன் காக்கும் விதமாக கபசுர குடிநீர்

உடன்குடி ஒன்றியம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி தெற்கு மாவட்ட பொருளாளர் இராமநாதன் ஏற்பாட்டில் பரமன்குறிச்சி திமுக சார்பில் குதிரைமொழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மானாடு பகுதிகளில் மக்களின் நலன் காக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, யூனியன் கவுன்சிலர் ராமலட்சுமி,ஆகியோர் தலைமை தாங்கினர் .மானாடு கிளைச்செயலாளர் சுடலைக்கண், அவைத்தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உடன்குடி ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், தகவல் தொழில் நுட்ப அணி பாலமுருகன், கழக முன்னோடி பம்பாய் பழனி,மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *