தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல்துறை சரகத்திற்குட்பட்ட கடைசி ஊரான கடற்கரை கிராமம் வெள்ளப்பட்டியில் சனிக்கிழமை மாலையில் தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம் முன்பு பங்கு தந்தை அருட்பணி எஸ்.ஏ. ராஜா அவா்கள் தலைமையில் கீழ அரசடி பஞ்சாயத்து தலைவா் ராயப்பன் துனைத் தலைவா் மோகன்ராஜ் முன்னிலையில் தாளமுத்துநகா் காவல் துறை ஆய்வாளா் ஜெயந்தி அவா்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கினாா்கள். இந்நிகழ்வில் வெள்ளப்பட்டி ஊா் கணக்கா் ஆலாசனை மாியான் மற்றும் சவாியானந்தம் சமூக ஆா்வலா் தொம்மை அந்தோணி உட்பட பலா் கலந்து கொண்டனா்
