சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பன்னம்பாறை கிராமத்தில் மர்ம பொருள் இருப்பதாக தகவல்

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பன்னம்பாறை கிராமத்தில் மர்ம பொருள் இருப்பதாக தகவல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளம் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்து விளக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பன்னம்பாறை கிராமம், மெயின்ரோட்டைச் சேர்ந்த இசக்கி கோனார் மகன் நல்லகண்ணு (வயது 74) என்பவர் இன்று (02.09.2020) காலை தனது வீட்டின் காம்பவுண்டு முன்பக்கத்தில் ஒரு மர்ம பொருள் இருப்பதாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அவரது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. காட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பெர்னாட் சேவியர், வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்.ஐ. திரு. குலசேகரன், மோப்ப நாய் சேரன் மற்றும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களும் சாத்தான்குளம் பன்னம்பாறை கிராமத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை சோதனை மேற்கொண்டதில், அது ஒரு பழைய தேங்காய் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சாத்தான்குளம், பன்னம்பாறையில் நல்லகண்ணு என்பவரது வீட்டின் முன் பக்கத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பொருள் இருப்பதாக, அவர் சொன்னார். அதனடிப்படையில் அங்கு சென்று பார்த்ததில் தேங்காயில் நூல் சுற்றியிருந்தது, உடனே காவல்துறை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில், அது நூல் சுற்றப்பட்ட தேங்காய் முடிதான், அதனை உடைத்துப் பார்த்ததில் எந்த விதமான வெடிபொருளோ, வேறு எதுவுமே கிடையாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *