ஸ்ரீ சித்தர் பீடத்தில் சுதந்திர தின விழா

தூத்துக்குடி ஸ்ரீ சித்தர் பீடத்தில் சுதந்திர தின விழா ஆஞ்சநேயருக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகளுடன் நடைபெற்றது.

நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன்படி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீ சித்தர் நகர் ஸ்ரீ சித்தர் பீடத்தில் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நாட்டு மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும், கொடிய நோய்களை எதிர்க்கும் வகையில் திடமனதுடன் வலிமையானவர்களாக இருந்திடும் பொருட்டு ஆஞ்சநேயர் கையில் தேசிய கொடி வைக்கப்பட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *