தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது

சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின்நிலையத்தை சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் துணை மின்நிலையத்தை சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதியிலும்,

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தை சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும், பழனியப்பபுரம் துணை மின்நிலையத்தை சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

உடன்குடி

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி துணை மின்நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் இன்றுகாலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *