கிசான் கடன் அட்டை பெறும் வழிமுறைகள்

விவசாயிகள் வேளாண் இடு பொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் வாங்குவதற்கு கிசான் கடன் அட்டை அவசியம். இக்கடன் அட்டைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் நில உடமை ஆவணங்களை சமர்ப்பித்து பெறலாம். விவசாயிகள் நில உடமை அடிப்படையில் பிணையம் இல்லாத கடன் தொகை ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், பிணையத்துடன் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் அட்டையை பயன்படுத்தி பெறலாம்.

இக்கடனுக்குரிய வட்டியை குறித்த காலத்தில் சரியாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு வழங்குகிறது. விவசாயிகள் ஆண்டுக்கு 4 சதவீதம் வீதம் மிகக்குறைந்த வட்டியில் விவசாய கடன் அட்டைகள் மூலம் பயிர் கடன் வசதியை பெறலாம். வேளாண்மை, தோட்டக்கலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் அட்டை தற்போது கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழிலுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை கமிஷன் கடையில் அதிக விலைக்கு வாங்கியும், அதிக வட்டிக்கு பணம் வாங்கி வாங்குவதாலும் விவசாயிகள் தங்களின் உற்பத்தியில் பெரும் பகுதியை வட்டி செலுத்தியே கடனிலேயே வாழும் சூழலில் உள்ளனர். கிசான் கடன் அட்டை பெறுவதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு தேவையான பொருட்களை குறைந்த வட்டியில் உரிய நேரத்தில் வாங்கி கொள்ள வாய்ப்பு ஏற்படுவதுடன், அவர்கள் தன்னம்பிக்கையுடனும், தன்மானத்துடனும் வாழவும் வழி வகுக்கிறது.

Pm kisan credit card apply link: https://pmkisan.gov.in/Documents/Kcc.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *