தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், 2020-2021ம் ஆண்டிற்கான கடன் திட்டம் குறித்த கையேடு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 2019-2020ம் ஆண்டிற்கான ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்த வருடாந்திர அறிக்கையினையும் வெளியிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்
பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2019-2020ம் ஆண்டிற்கான கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.9,652 கோடி நிர்ணயிக்கப்பட்டு அதில் ரூ.11,326 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது 117 சதவீதம் ஆகும். இந்த இலக்கினை அடைவதற்கு வங்கியாளர்கள் அனைவரின் பங்கும் பாராட்டுக்குரியது. நடப்பு
நிதியாண்டிற்கான இலக்கு ரூ.12,084 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த.இலக்கினை அடைவதற்கு அனைத்து வங்கியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கு அனைத்து வங்கிகளும் தற்போதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டினை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான அனைவருக்கும் கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் யோகானந்த், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் துரைசாமி, கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி இணை மேலாளர் விஜய்குமார் மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.