pongal

பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை என்ற கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாடினர்.பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அமெரிக்கா,பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆகும்.கரகாட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.தமிழர் பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டினர் மண்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.கிராம மக்களுடன் இணைந்து நடனமாடியும்,இளவட்டக்கல் தூக்கும் போட்டியிலும் பங்கேற்று சுற்றுலா பயணிகள் மகிழ்சியை தெரிவித்தனர்.இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.