அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கான தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
