தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தற்போது ஊரெங்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்களுக்கு அரசு பணியாளர்கள், சமூக அரவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் இலவசமாக கபசுரக் குடிநீர், முகக்கவசம் மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணா குமார் அவர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் ராஜபாண்டி நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.