திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாத சூழல் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்க முடியாத சூழல் உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் உறவினர்கள் கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது ஒரு மகன், 2 மகள்கள் என 4 நபர்கள் மரணமடைந்துள்ளார்கள்.

அவர்களின் உறவினர்களிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மரணமடைந்தவர்களின்
படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மேலும் அமைச்சர் தனது சொந்த
நிதியில் இருந்து, மரணமடைந்த கண்ணன் அவர்களின் சித்தப்பா மோகன் அவர்களிடம் ரூ25,000/- வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

“கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் தோட்ட
பணியாளர்களாக நமது தூத்துக்குடி மாவட்டத்ததை சேர்ந்த பணியாளர்கள் ஏராளமானோர் அங்கே தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.

மூணாறுக்கு அருகே உள்ள ராஜமலை பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி இரவு ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் தமிழகத்தை
சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக நமது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களின் உறவினர்கள் 90 சதவீதம் பேர்.

நெல்லை மாவட்டத்தில் 10 சதவீதம் பேரும் அங்கே பணியாற்றி
பலியானார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் கேரள மாநில முதலமைச்சரோடு தொடர்பு கொண்டு அந்த விபத்தில் பலியான அத்தனை பேரின் உடல்களை
விரைந்து மீட்க வேண்டும் எனவும்,

எஞ்சியவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசு வேகமாக
ஈடுபட வேண்டும் எனவும், அதிலே காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக அரசின் மூலமாக எந்த உதவி கேட்டாலும் நாங்கள் செய்ய தயார் நிலையில் இருக்கின்றோம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேரள முதலமைச்சரோடு பேசி அதன்பிறகு மீட்பு பணிகள்

வேகமாக நடைபெற்று இன்று
காலை வரை 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிலே கயத்தாறு பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 24 பேர் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலை பற்றி தற்போது சிந்திக்க நேரமில்லை எனவும், தற்போது முழு கவனமும் மக்களை காப்பதிலேயே இருப்பதாக” தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *