தூத்துக்குடியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முதல் நிலைக்காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் வழங்கிய நிதியுதவி ரூபாய் 16 லட்சத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் புங்கலிங்கம் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தெய்வத்திரு. புங்கலிங்கம் என்பவர் கடந்த 10.06.2020 கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேற்படி புங்கலிங்கம் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 2100 சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 16,01,453/- பணம் நன்கொடை பெற்று, அந்தப் பணத்தில் புங்கலிங்கங்கத்தின் மகள்கள் பேபி (வயது 7) மற்றும் சிவகாமி (வயது 4) ஆகிய இருவருக்கும் தலா ரூபாய் 6 ½ லடசம் வீதம் இருவருக்கும் எஸ்.பி.ஐ இன்சூரன்ஸில் டெபாசிட் செய்தும், புங்கலிங்கலிங்கத்தின் மனைவி திருமதி. காசியம்மாள் அவர்களுக்கு ரூபாய் 2,01,453/-ம் வங்கி டெபாசிட் செய்தும், மீதம் உள்ள ரூபாய் 1 லட்சத்தை புங்கலிங்கத்தின் தாயார் திருமதி. தெய்வானை அவர்களுக்கு காசோலையாகவும் வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி இன்று (24.07.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2008ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் புங்கலிங்கம் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறியதோடு, தனது பங்களிப்பாக அவரும் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் உடனிருந்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2008ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 2100 காவலர்களின் இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த புங்கலிங்கத்தின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்திற்கு காவல்;துறை சார்பாக என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்தார்.
காவல்துறையினர் அயராத இப்பணியின் நடுவே கருணையுள்ளத்தோடு இந்த நிதியை திரட்டிய 2008ம் ஆண்டு காவலர்கள் குழுவைச் சேர்ந்த கடலூரிலிருந்து திரு. சந்தோஷ் மற்றும் பாலசுப்பிரமணியன், செங்கல்பட்டிலிருந்து கணேஷ், தஞ்சாவூரிலிருந்து இளமாறன், மதுரையிலிருந்து பால்பாண்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பாலசுப்பிரமணியன், திருச்சியிலிருந்து ஆனந்த், திருநெல்வேலியலிருந்து சின்னத்தம்பி மற்றும் தூத்துக்குடி காவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.