நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்குப்படுத்தக் கோரியும் திமுக தலைவர் மாண்புமிகு., மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உயர்திரு., உதயநிதிஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள் வீடுகள் முன்பாக கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், தூத்துக்குடியிலுள்ள தனது இல்லத்தின் முன்பாக இளைஞர் அணியினருடன் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதில், இளைஞர் அணி வசந்த், ராபின், பிருத்விராஜ், ஆகாஷ், சக்திவிஜய், விஸ்வநாதன், சிவமுருகன் மற்றும் முருகன் உள்ளிட்டவர்கள் முககவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் பங்கேற்றனர்.