14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்ச்சங்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்செந்தூரில் ஆர்பாட்டம்.
கொரொனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிடகோரியும், காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி வாரிசு வேலை வழங்கிடகோரி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் பரமன்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் திருச்செந்தூர் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.