விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி அமமுக வட்ட செயலாளா் “மண் சோறு சாப்பிடும்” போராட்டம்

தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி அமமுக வட்ட செயலாளா் “மண் சோறு சாப்பிடும்” போராட்டம் மற்றும் பரபரப்பு பேட்டி

கடந்த 2011ம் ஆண்டு தூத்துக்குடிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்தால் தூத்துக்குடி விவிடி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். அதன் பின்னர் அங்கு மண் பரிசோதனை மட்டும் நடந்தது. மேம்பாலம் அமைப்பதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. மேலும் தூத்துக்குடியில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வட்ட செயலாளா் காசி அவா்கள் தலைமையில் மண் சோறு சாப்பிடும் போராட்டம் அண்ணா நகா் மெயின் ரோட்டில் நடைபெற்றது. இதில், அமமுக நிர்வாகிகள் கணேசன், மணி, கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *