மெஞ்ஞானபுரத்தில் கொரோனா தொற்று – மின்வாரியம் மற்றும் தபால் அலுவலகம் மூடல்

உடன்குடி, குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் மெஞ்ஞானபுரத்தில் உள்ள மின்வாரிய ஊழியர்கள், தபால் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில் மின்வாரிய பெண் ஊழியர் ஒருவருக்கும், தபால் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இருஅலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் தொடர்புகளை அறிந்து அவர்களுக்கும் மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர் சேதுபதி மற்றும் சுகாதார பணியாளர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் உடன்குடி அனல்மின்நிலை ஊழியர்கள் நான்குபேர், பரமன்குறிச்சி முந்திரிதோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என உடன்குடி பகுதியில் ஓரேநாளில் 7 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *