கழுகுமலை பேரூராட்சியில் 1.35 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை, மற்றும் குடிநீர் வசதி அமைக்கும் பணி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சியில் பல்வேறு பகுதியில் பேவர் பிளாக் சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு குடிநீர் வசதி செய்தல் ஆகிய பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கழுகுமலை பேரூராட்சியில் ரூ1.35 கோடி மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள், மற்றும் சிறு குடிநீர் வசதி செய்யும் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: “தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள்,அங்கன்வாடி கட்டிட வசதிகள், பள்ளிக் கட்டிட வசதிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளுக்கு

புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. கயத்தாறு பேரூராட்சி பகுதியில் இன்று 14வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் APL நகர் முதல் அண்ணாநகர், புதுத்தெரு, மற்றும்
குறுக்குத்தெரு பகுதிகளுக்கு

ரூ.63 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்
சாலை அமைக்கும் பணிகளும், வடிகால் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் கழுகுமலை BSNL அலுவலகம் அருகில் ரூ.63 லட்சம் மதிப்பில் பல்வேறு தெருக்களுக்கு சாலை வசதி மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது.

இப்பணிகள் அனைத்தும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும்
அண்ணாநகர் புதுத்தெரு, குமாரபுரம் காலனி தெரு, கழுகுமலை தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணிகள் அனைத்தும் அடுத்து இரண்டு மாதங்களுக்குள் செய்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஐயா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், பேரூராட்சிகள் துறை உதவி பொறியாளர் அன்னம் உட்பட அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *