வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை – கலெக்டர் தகவல்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொ Iகை பெற விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் படி தமிழக அரசால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10ம் வகுப்பு தோல்வி, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2, டிப்ளமோ (பட்டயப்படிப்பு) மற்றும் பட்டப்படிப்பு படித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-4 சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகுமாறு கூறினார். விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :
விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராவும், சுய வேலை வாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பினை ரூ.50,000லிருந்து ரூ.72,000 ஆக கடந்த 25.7.2019 முதல் அரசாணைப்படி உயர்த்தப்பட்டது.அதன்படி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *