காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு திட்டம்!!

அகர்பத்தி உற்பத்தியில் இந்தியாவை சுயசார்பாக மாற்றுவதற்கான புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வேலையில்லாத மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்

காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம்

அகர்பத்தி உற்பத்தியில் இந்தியாவை சுயசார்பாக உருவாக்க காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

“காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம்” (Khadi Agarbatti Aatmanirbhar Mission) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலையில்லாத மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு அகர்பத்தி (Agarbatti) உற்பத்தியையும் கணிசமாக அதிகரிக்கும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தும் போது, ​​அகர்பத்தித் துறையில் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

காதி மற்றும் கிராமக் கைத்தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission) இயந்திரங்களின் விலைக்கு 25 சதவீத மானியத்தை வழங்கும் மற்றும் மீதமுள்ள 75 சதவீத செலவை கைவினைஞர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் எளிதான தவணைகளில் வசூலிக்கும்.

வணிக பங்குதாரர் அகர்பத்தியைத் தயாரிப்பதற்கான கைவினைஞர்களுக்கு மூலப்பொருளை வழங்குவதுடன், அவர்களுக்கு வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்குவார்.

கைவினைஞர்களின் பயிற்சி செலவு காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மற்றும் தனியார் வணிகப் பங்குதாரர் இடையே பகிரப்படும், இதில் காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் 75 சதவீத செலவை ஏற்கும், 25 சதவீதம் வணிகக் கூட்டாளரால் செலுத்தப்படும்.

ஒவ்வொரு தானியங்கி அகர்பத்தித் தயாரிக்கும் இயந்திரமும் ஒரு நாளைக்கு சுமார் 80 கிலோ அகர்பத்தியை உருவாக்குகிறது, இது 4 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும்.

ஒரு தூள் கலக்கும் இயந்திரம், 5 அகர்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களில் ஒரு தொகுப்பில் வழங்கப்பட வேண்டும், இது 2 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

அகர்பத்தித் தயாரிப்பிற்கான தற்போதைய வேலை விகிதம் கிலோவுக்கு ரூ .15 ஆகும். இந்த விகிதத்தில், ஒரு தானியங்கி அகர்பத்தி இயந்திரத்தில் பணிபுரியும் 4 கைவினைஞர்கள் 80 கிலோ அகர்பத்தியை தயாரிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1200 சம்பாதிப்பார்கள்.

எனவே ஒவ்வொரு கைவினைஞரும் ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.300 சம்பாதிப்பார்கள். இதே போல், தூள் கலக்கும் இயந்திரத்தில், ஒவ்வொரு கைவினைஞருக்கும் ஒரு நாளைக்கு 250 ரூபாய் நிர்ணயிக்கப்படும்

இத்திட்டத்தின் படி, கைவினைஞர்களுக்கான ஊதியம் வணிகப் பங்காளிகளால் வாராந்திர அடிப்படையில் நேரடியாக அவர்கள் கணக்குகளில் நேரடிப் பரிமாற்றம் (DPT) மூலம் மட்டுமே வழங்கப்படும்.

கைவினைஞர்களுக்கு மூலப்பொருள்களை வழங்குதல், தளவாடங்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் இறுதியில் உற்பத்தியினை சந்தைப்படுத்தல் ஆகியவை வணிகக் கூட்டாளியின் முழுப் பொறுப்பாக இருக்கும். 75 சதவீத செலவை மீட்டெடுத்த பிறகு, இயந்திரங்களின் உரிமை தானாக கைவினைஞர்களுக்கு மாற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *