collector

பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை விரைவுப்படுத்திடவும், மேம்பாடு அடைய செய்திடவும், தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கை எளிமையாக்க தொழிற் கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமம் / மின் இணைப்பு ஒப்புதல் ஆகியவற்றை எவ்வித சிரமுமின்றி விரைந்து வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்கள் சுய தொழில் துவங்க பல்வேறு திட்டங்களில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நீட்ஸ் திட்டத்தின்கீழ் பல்வேறு படித்த இளைஞர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் , நீட்ஸ் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்யப்பட்டு அதில் 4 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு திட்ட முதலீடு ரூ.2.53 கோடியில் அரசு மானியமாக ரூ.35.50 லட்சம் கடன் உதவி பெற கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் இணைந்து பல்வேறு தொழில்களை துவங்க 116 விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் டி.கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், கிளை மேலாளர் (டி.ஜ.ஜ.சி) முருகன், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், உதவி இயக்குநர், (குறு, சிறு நடுத்தர தொழில்கள்) ஜெரினா, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் தெய்வேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பாக்கியலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.