இதோ இது தான் காவிரி,… கொள்ளிடம்…, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்… என்று விமானத்தில் தமிழில் வர்ணனை ! அசத்தும் சென்னை பைலட் பிரிய விக்னேஷ்
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் சென்னை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ் என சர்வதேச விமானங்களில் கூட தினசரி தமிழில் அறிவிப்புக்களை கேட்கலாம்… ஆனால் தமிழகத்தில் பயணிக்கும் விமானங்களில் தமிழ் நீஷ மொழி என்ற அளவிலேயே இன்னும் இருக்கிறது
இந்நிலையில் சென்னை-மதுரை இன்டிகோ விமானத்தில் பயணிப்பவர்களுக்கு திருச்சியின் முக்கிய இடங்களை “இதோ இது தான் காவிரி,… கொள்ளிடம்…, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்…” என விமானி (flight officer) பிரிய விக்னேஷ், தமிழில் அடையாளம் காட்டும் வீடியோ இனையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் நம்பிக்கையுடன் பேசும் திறமைக்கு காரணம் அரசுப்பள்ளி ஆசிரியரான தனது தாய் தவமணி என்றும் அவர் தெரிவித்துள்ளது பலராலும் பாராட்டுக்கு ஆளாகியுள்ளது.
தனது உயர் அதிகாரி கேப்டன் சஞ்சீவ், விமானத்தை இயக்கும்போது முக்கிய இடங்களை அடையாளம் காட்டிக் கொண்டே வருவார் என்றும் அந்த தூண்டுதலே தமிழில் வர்ணனை தர வழிவகுத்ததாகவும் பிரிய விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.