நெகிழியால் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு – சென்னை

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்னம் என்பவரது பசுவிற்கு கடுமையான உடல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பசுவின் வயிற்றில் வலி ஏற்பட்டதால் அது தன் கால்களை கொண்டு வயிற்றை அடிக்கடி உதைத்துள்ளது. மற்றும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பசு மிகவும் சிரமப்பட்டதை அறிந்த முனிரத்னம் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் அவரது பசுவினை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவமனையில் பசுவிற்கு கடந்த வெள்ளியன்று காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு 4.30 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. நடத்த அறுவை சிகிச்சையில் 52 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகள் பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டன. பசுவின் இரைப்பையை 75 சதவிகித நெகிழி கழிவுகள் ஆக்கிரமித்திருந்ததாகவும் அவற்றை அகற்றியது சவாலாக இருந்ததாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். நெகிழி கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.