2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர் தகவல்!!

நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் ஆண்டு தோறும் இந்திய அரசின் சார்பில் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. மேற்படி விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.padmaawards.gov.in 616013 இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சாதனை சான்றுகளுடன் இரண்டு பிரதி விண்ணப்பங்களை 05.09.2020, மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி – 628 001
தொலைபேசி எண் : 0461-2321149 மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *