பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் MLA உண்ணாவிரத போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் வடகால் தென்கால் பாசனம் மற்றும் மருதூர் மேலகால், கீழகால் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி நாளை மறுநாள் 27ம் தேதி திமுக சார்பில் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்டப் பொறுப்பாளார் அனிதா ராதாகிருஷ்ணன். எம்.எல்.ஏ செய்திகுறிப்பில் அறிவித்துள்ளதாவது:-

தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் நீர் தேக்கத்தில் கடந்த 18.08.2020 அன்று திறந்த தண்ணீர் இன்னும் ஸ்ரீவைகுண்டம் வந்து சேரவில்லை. ஸ்ரீவைகுண்டம் வடகாலில் கொற்கைகுளம், ஆறுமுகமங்கலம்குளம், பேய்க்குளம், அகரம்குளம், பெட்டைக்குளம், பழையகாயல்குளம், குலையன்கரிசல்குளம், கோரம்பள்ளம்குளம், இதேபோல் தென்காலில் கடம்பாகுளம், ஆத்தூர் குளம், சேதுக்குவாய்த்தான்குளம், நாலுமாவடி வாய்க்கால்குளம், அம்மன்புரம் பெரியகுளம், கானம்குளம், சீனிமாவடிகுளம், நல்லூர் கீழகுளம், நல்லூர் மேலகுளம், ஆறுமுகநேரி கீழகுளம், வண்ணான்குளம், துலுக்கன்குளம், நத்தக்குளம், நாலாயிரமுடையார்குளம், ஆவுடையார்குளம்,
எல்லப்பநாயக்கன்குளம் பாசனத்திற்கும்

மற்றும் மருதூர் மேல்கால், கீழக்கால் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம், பட்டர்குளம், செந்திலாம்பண்ணை, பேரூர்குளம், சிவகளைகுளம், பெருங்குளம், பத்மநாபமங்கலம், பாட்டக்குளம், பீக்கன்குளம், ரெங்கநாதன் புதுக்குளம், எசக்கன்குளம், கைலாசப்பேரி, தருமனேரி, நெடுங்குளம், நொச்சிகுளம், கீழபுதுக்குளம், முத்துமாலைகுளம், வெள்ளரிக்காயூரணி, தேமாங்குளம் பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக தண்ணீர் திறந்து கருகும் நிலையில் பொதி பருவத்தில் உள்ள வாழை மற்றும் வெற்றியிலை பயிரை காப்பாற்றுவதற்கும்

ஆடு, மாடு குடிநீர் தேவைக்கும், இதைப்போல் கிராம மக்களின் நிலத்தடி குடிநீர் பாதுகாப்பதற்க்கு பாபநாசம் நீர் தேக்கத்தில் 109 அடி நீர் இருப்பு இருந்தும் இன்னும் ஒரு மாதத்தில் பருவமழை பொழிந்து அணையின் முழு கொள்ளளவை எட்டி வீணாக கடலில் கலக்கும் நிலை தவிர்பதற்கு கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கு அனைத்து விவசாயசங்கத்தின் கோரிக்கை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளாராகிய எனது தலைமையில், அனைத்து விவசாய சங்ககளும், விவசாய பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நாளை மறுநாள் ஆக.,27ம் தேதி அன்று முக்காணி ரவுண்டானா காமராஜர் சிலை அருகே நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *