சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் சிலை அமைக்க நிதி ஒதுக்கீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் குதிரை மீது அமர்ந்துள்ளவாறு

சிலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
“தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணிமண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளின்போது பொதுமக்கள் மற்றும் வாரிசுதாரர்கள், வழிதோன்றல்கள் ஆகியோரின் கோரிக்கையினை

முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இங்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்திருந்தார்.

அதன்படி தமிழக முதல்வர் 24.03.2020 அன்று சட்டப்பேரவையில் செய்தித்துறை மானிய கோரிக்கையின்போது வீர பாண்டிய கட்டப்பொம்மன் தன் தளபதியாக மட்டும் அல்லாமல், மகனாகவும் நினைத்து போற்றிய,

திருநெல்வேலி சீமை தந்த தீரம் மிக்க சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையுடன் உறுதிய வாளுடன் குதிரை மீது அமர்ந்து வரும்படியான

சிலை ரூ.39.75 லட்சம் மதிப்பில் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார் பொதுப்பணித்துறை மூலம் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் சிலை செய்யப்பட்டு நிறுவப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *