அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 30 பேர் படுக்காயம்

விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி புறவழிச்சாலையில் இன்று(பிப்.14) அதிகாலை 3 மணி அளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சாலையில் தடுப்பு கட்டையில் மீது சாலையில் நின்றுக் கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வேகமாக வந்த ஆம்னி பேருந்து, மினி லாரி மீது மோதியது. அதன்பின் மற்றொரு மினி லாரி, மற்றும் அரசு விரைவு பேருந்தும் விபத்தில் சிக்கி நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சென்னையில் இருந்து திருச்சி சென்ற 18 டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் விழுப்புரம் நகரத்திற்குச் சென்று மாற்று பாதையில் திருப்பிவிட்டு சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிக்கு பின்னர் டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 30 பேர் சிறு காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *