தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஒரு சிறப்பு கண்ணோட்டம்

புனித பிரான்சிஸ் சேவியர் (Francis Xavier )அவர்களால் மாதா பற்றி தூத்துக்குடி பரதவகுல(மீனவ) மக்களுக்கு 1536 யில் முதன்முதலாக சொல்லப்பட்டது. 1545 யில் மணிலா & பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரான்சிஸ் சேவியர் பயணித்த போது அவர் அகஸ்டியன் கான்வெண்ட் (Augustinian convent) சென்றார்…

அங்கு அவர் மாதாவின் சிலை ஒன்றை கண்டு ஈர்க்கப்பட்டு அதை தூத்துக்குடி பரதகுல மக்களின் வழிப்பாட்டிற்காக அங்குள்ள கன்னியாஸ்திரிகளிடம் கேட்டார். அவர்களும் அவரின் விருப்பத்திற்கிணங்க அதை தூத்துக்குடிக்குடிக்கு அனுப்பினார்கள்.

பிரான்சிஸ் சேவியர் இறப்பிற்கு பின் 1555 ஜூன் 9 யில் புனித ஹெலினா கப்பலில் மாதா சிலை தூத்துக்குடி வந்து சேர்ந்தது.அப்படி வந்த சிலையை போர்ச்சுகீசியர்கள் டச்சுக்காரர்கள் காலங்களில் அவர்களின் கடும் எதிர்ப்புக்கள் மற்றும் கொடுமைகள் தாண்டி பரதகுல மக்களால் பாதுகாக்கப்பட்டது.

விஜயநகர பேரரசு காலங்கள் மற்றும் மதுரை நாயக்கர் காலங்களில் தீக்கிரையாக்கப்பட்ட போதும் இந்த மாதா சிலை பரதகுல மக்களால் சிவந்தாகுளம் புனித ஜான் திருத்தலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

1658 யில் போர்சுகீசியர்களை வென்று டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றி கத்தோலிக் தழுவி வாழ்ந்த பரதவ மக்களை பிராட்டஸ்டேண்ட் ஆக மாற்ற முயன்றபோதும்…கத்தோலிக் சர்ச்சுகளெல்லாம் பள்ளிகளாக மாற்றப்பட்ட போதும் மனம் தளராமல் போராடிய பரத குல மக்கள் மாதாவின் சிலையை கொற்கையில் கொண்டு வைத்து பாதுகாத்தனர்.

பின் டச்சுக்காரர்களின் மனம் மாற்றி உடைத்த கத்தோலிக்க சர்ச் எல்லாம் மறுபடி கட்டப்பட்டு 1699 யில் மாதாவின் சிலையை கொற்கையில் இருந்து தூத்துக்குடி கொண்டு வந்து புதுப்பிக்கப்பட்ட சர்ச்சில் வைத்து பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது……தூத்துகுடியை பெரும் இடியும் மின்னலும் தாக்கியது….ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு எதுவும் ஆகாமல் அந்த இடியையும் மின்னலையும் தன் மேல் வாங்கி மாதா சிலை காத்து நின்றது.

தூத்துக்குடியும் அதன் சுற்றுப்புற கிராமங்களும் இடியும் மின்னலும் தாக்காமல் பாதுகாத்தது இந்த மாதாவின் சிலையே என்று நம்பி அப்படிப்பட்ட மாதாவின் சிலையை நிறுவி பெரிய சர்ச் ஒன்றை கட்டி மாதாவை பெருமைபடுத்த நினைத்தார் பாதர் விஜிலியஸ் மான்சி(Father Vigilius Mansi-the parish priest).

அப்படி ஒரு மிகப் பெரிய ஆலயம் மாதாவிற்காக அவர் கட்ட முற்பட்ட போது…..டச்சுக்காரர்கள் மற்றும் சொந்த நாட்டின் எதிர்ப்புக்களையும் ஆரம்ப காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்தது……அப்படி காலத்தில் அவர் துபாஸ்பட்டி மற்றும் ராஜதீவு (முயல் தீவு) போன்ற இடங்களில் வைத்து மாதா சிலையை பாதுகாத்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

இறுதியாக டச்சுக்காரர்கள் அனுமதி அளித்து இன்று இருக்கும் மாதா கோவில் கட்ட 1712 யில் ஏப்ரல் 4 யில் அடிக்கல் நாட்டப்பட்டது.அதன் அடுத்த ஆண்டு 1713 யில் ஆகஸ்ட் 5 ஆம் நாள் பனிமய மாதா ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு முதல் திருப்பலி நடத்தப்பட்டது.இப்படி 400 க்கும் மேற்பட்ட ஆண்டுகால பழைமை மற்றும் அதை நிறுவ பரதவகுல மக்கள் பட்ட அரும்பாடுகள் மேலும் நிறுவிய பின்னரும் அதை இன்று வரை கட்டிக்காக்கும் பெருமை என்று எங்களின் தூத்துக்குடி மாதா கோவிலுக்கு அரை ஆயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு.

அப்படி பெருமை வாய்ந்த அனைத்து மக்களாலும் ஜாதி மதம் தாண்டி ஒற்றுமையாய் கொண்டாடப்படும் திருவிழா தூத்துக்குடி மாதா கோயில் திருவிழா.

5.8.2020 இன்று நடக்கும் மாதா கோயில் திருவிழா சிறக்கட்டும். அனைவரும் மாதாவின் அருள் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல எங்கள் பனிமய மாதாவை மண்டியிட்டு வணங்கி மகிழ்வோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *