சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் பலி – புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 14-ம் தேதி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது. விசாரித்த போது சக்திகுமார் என்பவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் என்பது தெரிய வைத்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து வந்தவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்து 14 நாட்களுக்கு பிறகே அவரை வெளிய செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், சக்திகுமாரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.