நடிகர் ரஜினியை பார்த்து யார் நீங்கள்? என்று கேலியாக பேசிய நபர் திருட்டு வழக்கில் கைது – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாம்குமார் என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை வடபாகம் காவல் துறையினரிடம் புகார் அளித்து இருந்தார். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23 வயது) , கால்டுவெல் காலனி மணி (23), மற்றும் ஆசிரியர் காலனி சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிவந்தது. மேலும் கைதான சந்தோஷ் என்பவர் 2018ல் துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட போது, நடிகர் ரஜினிகாந்த் காயமுற்றவர்களிடம் ஆறுதல் கூற வந்த போது, நீங்கள் யார்? என கிண்டலாக கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புகார் அளித்த சில நாட்களில் காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு அவர்களை கைது செய்ததோடு அவர்கள் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.