தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் 6 வது கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

அச்சுறுத்தும் கொரோனா தொற்றை அச்சமின்றி விரட்டிட, இன்று (08/08/2020) சனிக்கிழமை காலை 7. 00 மணியளவில் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு புனித ஆரோக்கியநாதா் ஆலயம் முன்பு திருப்பலி முடிந்தவுடன் நடைபெற்றது . இந்நிகழ்வில் பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக்குடிநீரை பெற்றுச் சென்றனா்.

இந்த நிகழ்வுக்கு உதவி செய்த அனைவருக்கும் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸப் குழு சார்பாக நன்றி தெரிவித்தார்கள். இந் நிகழ்வை நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸப் குழுவினா் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளையினா் செய்கின்றனா் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *