ஆபாசப் படம் பார்த்த ‘6500 பேர்’ லிஸ்ட் ரெடி …

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ சமீபத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், பகிருவதிலும் தமிழகம் தான் முதலிடம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மொத்தமாக 6500 பேர் ஆபாசப் படங்கள் பார்க்கும் பட்டியலில் இருப்பதாகவும், அதில் அதிகமாகக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல் பிரபலங்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். மேலும் நாங்கள் யாரையும் செல்போனில் அழைத்து புகார் தெரிவிப்பதில்லை. அப்படி ஏதேனும் அழைப்பு வந்தால் அது குறித்து எங்களுக்குத் தகவல் கொடுங்கள். நாங்கள் விசாரணை மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.