இந்தியாவின் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம்

நாட்டின் 11-வது குடியரசு தலைவராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கடந்த 2002-ம் ஆண்டு பதவி ஏற்றார். மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, உயிரிழந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான, ராமேஸ்வரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அங்கு அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்துல்கலாமின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொரோனா ஊரடங்கு காரணமாக கலாமின் குடும்பத்தினர் மட்டும் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *