தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் நடத்தும் 43வது சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 9ம் தேதி முதல் ஜன.21ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்குகிறது. இதில், 700க்கும் மேற்பட்ட அரங்குகள், 15 லட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 வரையிலும், விடுமுறை நாட்களில் பகல் 11 முதல் இரவு 9 வரையிலும் புத்தகக்காட்சி நடைபெறும். தமிழ்மொழியின் சிறப்பையும், பாரம்பரியத்தையும், திருக்குறளின் பெருமையையும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ‘கீழடி-ஈரடி’ என்ற தலைப்பில் பிரமாண்டமான அரங்கு தொல்லியல்துறையின் ஒத்துழைப்போடு அமைய உள்ளது. பொதுமக்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் ₹10. மெட்ரோ ரயில் பயண அட்டைக்கு அனுமதி இலவசம்
மெட்ரோ ரயில் பயண அட்டை உள்ளவர்களுக்கு புத்தகக் காட்சியில் இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
