பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக திடீரென அறிவித்திருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *