உடல்நலக்குறைவால் மறைந்த விளாத்திகுளத்தை சேர்ந்த காவலர் குடும்பத்துக்கு தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் உதவும் உறவுகள் குழு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர காவல்நிலையத்தில் முதல்நிலை காவலாராக பணியாற்றியவர் பி. வடிவேல். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து மறைந்த காவலர் வடிவேல் குடும்பத்துக்கு உதவிடும் பொருட்டு, அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு போலீஸ் 2006 அணியின் சார்பில் உதவும் உறவுகள் வாட்ஸ் அப் குழு மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 12 லட்சத்து 21 ஆயிரத்து 141க்கான வங்கி வரைவோலையை, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் வசித்து வரும் மறைந்த வடிவேலின் மனைவி முருகலீலாவிடம் 2006ஆம் ஆண்டு அணி போலீஸார் வழங்கினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தனர்.