144 தடை உத்தரவை மீறிய 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (05.07.2020) 144 தடை உத்தரவை மீறிய 115 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 05.07.2020 அன்று முழு ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 115 நபர்களை கைது செய்து, 42 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7013 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8236 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3316 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *