நீடிக்கும் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மஹா புயல், புல்புல் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன. இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை,ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.