தமிழகத்தில் மட்டும் 500 பேருக்கு மேல் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு –

வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சலால் தமிழகத்தில் மட்டும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் மற்றும் ஒரு சில மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவது தெரியவந்துள்ளது. தர்மபுரி ,வேலூர் ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குவால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புள்ளிவிபரம் மூலம் தெரியவருகிறது, இதனை தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு ஒருவிதமான பீதி கிளம்ப தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஓர் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9 மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 27886 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1186 பேர் உயிரிழந்ததாகவும் அறிய முடிகிறது. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5087 பேரும், குஜராத்தில் 4840 பேரும், டெல்லியில் 3606பேரும், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *