ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு பரிசாக நாட்டுப் பசுமாடு

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டு மாடுகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்று பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகளாக கார், பைக், டிவி, பீரோ வழங்குவதற்கு பதில் நாட்டுமாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு கோரிக்கையை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்  வெளியிட்டு வருகின்றன. அவை தற்போது வைரலாக பரவுகிறது. பின்பு நாட்டுமாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உயர்ந்த நோக்கமும், விருப்பமும் இதில் தெரிகிறது, எனவேதான் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த முதல் ஜல்லிக்கட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காளைக்கும், சிறந்த வீரருரக்கும் ஏ-2 பால் தரக்கூடிய இரண்டு நாட்டுப் பசு மாடுகளை பரிசாக வழங்கப்பட்டதாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற பொன்.குமார் தெரிவித்துள்ளார். தற்போது ஜல்லிக் கட்டு வீரர்கள், தங்கள் காளைகளுடன் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *