சுஜித் க்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி – ரூ.10 லட்சம்

மணப்பாறையை அடுத்தநடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜூக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பயனற்ற ஆழ்துளைக் கிணற்றில் அவரது 2 வயது குழந்தை சுஜித் வில்சன் அக். 25-ம் தேதி மாலை தவறி விழுந்தார். குழந்தையை அதிலிருந்து உயிருடன் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அக்.29-ம் தேதி அதிகாலை குழந்தை சுஜித் வில்சன் சடலமாக தான் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்தார். அதன்படி தமிழக முதல்வர் அறிவித்தபடி, முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை குழந்தையின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று வழங்கி, ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *