குடும்ப வறுமை காரணமாக மகள்களுடன் தற்க்கொலைக்கு முயன்ற தாய்

தேனி அருகே குடும்ப வறுமையின் காரணமாக தனது மூன்று மகள்களுக்கும் விஷம்கலந்த உணவை கொடுத்து, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி ஜக்க நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பால்பாண்டி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், அவரது மனைவி லட்சுமி, மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்பத்தை நடத்த மிகவும் சிறமப்பட்டுள்ளார் . ஏலக்காய் பிரித்தெடுக்கும் வேலைக்கு சென்று குறைந்த வருமானத்தில் மகள்களை படிக்க வைத்த அவர், அன்றாட உணவிற்கே மிகவும் கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார். வீட்டின் வாடகையைகூட செலுத்த முடியாததால் மனமுடைந்த லட்சுமி, தனது மகள்களுடன் விஷம்கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அனுசியா, ஐஸ்வர்யா ஆகிய இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடைசி மகள் அக்க்ஷயாவும், தாய் லட்சுமியும்  உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *